புன்னகை தரும் புதன்-இன்றைய ராசிபலன்..!{16.7.2025}

 

புதன்கிழமை, 16 ஜூலை 2025
மேஷம்
aries-mesham
வாயை அடக்கி வம்புக்கு செல்லாதிருப்பது சுகம். பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டும் வாங்கவும். குறிக்கோளின்றி மனம் போன போக்கில் அலைய நேரும்.
ரிஷபம்
taurus-rishibum
ஆரோக்கியம் மேம்படும், மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவார். வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு தனலாபம் உண்டு. பெண்களால் ஆண்களுக்கு ஆதாயம் ஏற்படும்.
மிதுனம்
gemini-mithunum
சிலருக்குச் சாதகமான திடீர் பயணங்கள் ஏற்படும். தெய்வபக்தி மேலிடும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சுகமும் சந்தோஷமும் அதிகரித்து, இந்த ராசிக்காரர்கள் குஷியாக இருக்கும் நாள் இன்று.
கன்னி
virgo-kanni
புகழ், மரியாதை கூடும். பெரிய மனிதர் எனப் பெயரெடுப்பர். சஸ்திர அறிவு கூடும். சந்ததி விருத்தி உண்டு. அரசுத் துறைகள் மூலம் ஆதாயங்கள் பெருகும். வலிய வந்து உறவினர் உதவுவர்.
மகரம்
capricorn-magaram
மனத்தெம்பும், மனமகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். தனலாபம், புதிய நண்பர்கள் சேர்க்கை என புதிய உற்சாகங்கள் பொங்கும் நாள். தொழில் விரிவாக்கத்துக்கு துணைபுரியும் நாள்.
கடகம்
cancer-kadagam
வாகன யோகம் ஏற்படும். காதல் வயப்படும் நாள். பேச்சு சாதுர்யத்தால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். அரசால் ஆதாயம் உண்டு. தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.
சிம்மம்
leo-simmam
மாற்றம் ஒன்றே மாறாதது. எனவே, மாற்றங்களை எதிர்பார்க்கலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும்..
துலாம்
libra-thulam
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நினைத்தபடி எதுவும் நடக்காது. பிற்பகலில் வாழ்க்கையில் புது திருப்பங்கள் ஏற்படும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். தொழில் அபிவிருத்திக்கான திட்டங்கள் ஈடேறும்.
மீனம்
pisces-meenam
வாகன யோகம் உண்டு. எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். மனத் திருப்தி, தொழில், வியாபாரத்தில் பணவரவு என இராஜயோகங்கள் தரும் நாள். புத்தாடை அணிகலன்கள் புதிதாகச் சேரும்..
தனுசு
sagittarius-thanusu
அன்னையின் உடல் நிலையில் அக்கறை தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்ய வேண்டிய நாள். வாகன சுகம் குறையும். எதிர்பார்த்த தன வரவும், இனிய தூக்கமும் குறையும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
சுகமும், பாக்கியமும் விருத்தியாகும். புதிய உற்சாகம் உண்டாகும். பகைவர்கள் விலகி ஓடுவர். மனைவியின் முழு ஒத்துழைப்புக் கிடைக்கும் குழந்தைகள் மீது அன்பும், பாசமும் பெருகும்.
கும்பம்
aquarius-kumbam
சுமாரான நாள். சோம்பலை விட்டு சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய நாள். படிப்பில் அதிக கவனம் தேவை. அலட்சியம் அல்லல் தரலாம். தொழிலில் புதிய முதலீடுகளை தள்ளிப் போடுவது நல்லது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post