வெள்ளிக்கிழமை, 18 ஜூலை 2025
மேஷம்
aries-mesham
புதிய வியாபார விரிவாக்க விவகாரங்களில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் சுலபமாக கிடைக்கும். அதன் காரணமாக முன்னேற்றம் காண்பர். பேச்சு சாதுர்யத்தால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும்.
ரிஷபம்
taurus-rishibum
நல்லபடியாக உங்கள் ஆரோக்கியத்தைப் பேண வேண்டிய நாள். வாகனங்களை வெளியில் எடுக்கும் முன் அனைத்து பாகங்களையும் சோதித்து பார்த்து, எடுப்பது நல்லது.
மிதுனம்
gemini-mithunum
அரசு வேலைக்கு மனு செய்தவர்கள் சாதகமான பதில்களை பெறுவர். கடினமான பணியை கூட சுலபமாக முடித்து விடுவார்கள். தனலாபமும், எல்லா வகையிலும் நன்மையும் ஏற்படும்.
கன்னி
virgo-kanni
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். அனைவருக்கும் நன்மை செய்யும் எண்ணத்தைக் கைக் கொள்வது நல்லது. பெண்ணால் குடும்பத்தில் கலகம் உருவாகலாம்.
மகரம்
capricorn-magaram
தன வருவாய் திருப்திகரமாக இருக்கும். வழக்கு விவகாரங்களில் சிக்கல்களை சந்திக்க நேரும். உடல் நிலையில் அக்கறை தேவை, தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கவேண்டிய நாள்.
கடகம்
cancer-kadagam
எல்லாக் காரியங்களும் அனுகூலமாகும். அரசிடம் எதிர்பார்க்கும் சலுகைகள் அனைத்தும் தடையின்றி கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
சிம்மம்
leo-simmam
மனைவியின் மனம் மகிழ, மலையை கூட அசைத்து விடுவார்கள். மழலைச் செல்வங்கள், மடியில் போட்டுக் கொஞ்சும் நாள் விரைவில் வரலாம். தெய்வீகக் காரிய ஈடுபாடு, தான தரும சிந்தனை ஏற்படும்.
துலாம்
libra-thulam
மிகவும் பிரபலமான நபருடன் நட்பு உருவாகும். பல முனைகளில் இருந்து பணவரவு அதிகரிக்கும். காதல் வலையில் விழ நேரலாம். மனைவி மூலம் நன்மைகள் ஏற்படும்.
மீனம்
pisces-meenam
தேவையற்ற பழிகளைச் சுமக்காமல் இருக்கக் குடும்பத்தாரிடம் பேசும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் பேசவும். கவனமாக படித்தால் தடைகளைத் தகர்த்தெரியலாம்.
தனுசு
sagittarius-thanusu
அதிகாரிகளிடம் பேசும்போது, அதிர்ந்து பேசாமல், அமைதியாக பேசுவது, உயர்வுக்கு வழிவகுக்கும். சுயநம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்ற வாய்ப்புகள் கதவைத் தட்டும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
புதிய வாகனம் வாங்க நினைக்கும், உங்கள் எண்ணங்கள் ஈடேறும். அதன் காரணமாக புதிய உற்சாகங்கள் பொங்கும். தொழில் விரிவாக்கத்துக்கு துணைபுரியும் நாள்.
கும்பம்
aquarius-kumbam
பணியில் கூடும் சம்பள உயர்வால், சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் மதிப்பு உயரும். அதிகரிகளின் பாராட்டும் கிடைக்கும்.