அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு.. பலர் பலி - 20 குழந்தைகள் மாயம்
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டெக்சாஸில் நேற்றைய தினம் பெய்த பலத்த மழை காரணமாக, இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ள நிலையில் 20 குழந்தைகள் உட்பட மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு உத்தியோகபூர்வ தகவல்கள் கூறுகின்றன.
சுமார், 45 நிமிடங்களுக்குள், குவாடலூப் நதி 26 அடி உயர்ந்த நிலையில் அங்கு மிக அழிவுகரமான வெள்ளம் ஏற்பட்டு சொத்துக்களையும் பல உயிர்களையும் பறித்துள்ளது என்று செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அனர்த்தத்தில் மீட்பு பணிக்காக 14 உலங்கு வானூர்திகளும், 12 ட்ரோன்கள் மற்றும் ஒன்பது மீட்புக் குழுக்களும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணியாளர்கள் உட்பட குறித்த தரைப்பகுதியில் சுமார் 400-500 இருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் முடிந்தவரை தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.