மியான்மரில் புத்த மடாலயம் மீது ஜுண்டா குண்டு தாக்குதல் 30 பேர் பலி
மியான்மரில் புத்த மடாலயம் மீது மியன்மார் விமானப்படை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர்.
மியன்மாரின் சாகிங் பிராந்தியத்தின் சாகிங் டவுன்ஷிப்பில் உள்ள லிண்டலு கிராமத்தில் இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கு அடைக்கலம் கொடுத்த மடாலயத்தின் மீது மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு குண்டுகளை வீசியதில், சுமார் 30 பேர் கொல்லப்பட்டதாக தெரியவருகிறது.
மடங்கள் போன்ற பொதுமக்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இடங்கள் மீது இராணுவ ஆட்சிக்குழு மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்துவது போர்க்குற்றமாகும்.