கோழிக் கூடுகளை மூடச்சென்ற 35 வயது மனைவி துடிதுடித்து பலி-கதறிய கணவன்..!

அநுராதபுரத்தில் நொச்சியாகம, அந்தரவெவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நொச்சியாகம, அந்தரவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய திருமணமான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று, இந்த பெண் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கோழி கூடுகளை மூடுவதற்கு சென்றிருந்த போது கோழி கூடுகளை சுற்றி பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியை தவறுதலாக தொட்டதால் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த பெண் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post