அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் உள்ள பயிற்சி நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட அமுலாக்க பயிற்சி நிலையத்தில் இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளதுடன் இவ்வாறு உயிரிழந்தவர்கள் 19 முதல் 33 வயது கொண்டவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெடி விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.