வகுப்பறைகளில் மாணவர் எண்ணிக்கை 25-30 ஆகக் குறைக்க திட்டம்.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாடசாலை வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
50-60 மாணவர்களுடன் ஒரு வகுப்பறையில் தரமான கல்வியை வழங்க முடியாது என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இன்று (ஜூலை 19) காலி தக்ஷிணபாய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பான தென் மாகாண கல்வி அதிகாரிகளை தெளிவூட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதைத் தெரிவித்தார்.
