மனைவியை பிரிந்த சோகம்-கணவன் மரணம்..!

 

மனைவி விவாகரத்து செய்ததால் மிகவும் வருத்தமடைந்த ஒருவர், ஒரு மாதமாக எதையும் சாப்பிடாமல், பீர் மட்டுமே குடித்து உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது

44 வயதான தவீசக் தனது மனைவியால் விவாகரத்து செய்யப்பட்டார். அவர்களுக்கு பதினாறு வயது மகன் இருந்தார்.

மகனை தவீசக்கிடம் விட்டுவிட்டு அப்பெண் வெளியேறினார். மனைவி தன்னை விட்டுச் சென்றதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தவீசக், சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். நாள் முழுவதும் பீர் குடித்துக்கொண்டிருந்தார்.

இதனால் அவரது உறுப்புகள் செயலிழந்து, அவரது உடல்நிலை மோசமடைந்தது. ஒரு தொண்டு நிறுவனம் தவீசக்கை மருத்துவமனையில் சேர்க்க முயன்றது.

இருப்பினும், தொண்டு நிறுவனங்கள் அவரது வீட்டை அடைவதற்குள் தவீசக் இறந்துவிட்டார். 

பொலிசார் அவரது அறையில் 100 பீர் பாட்டில்களைக் கண்டுபிடித்தனர். அதிகப்படியான மது அருந்தியதால் அவர் இறந்ததாக முதற்கட்ட தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post