தமிழகம் - ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள் என மூன்று பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில், தந்தை நாகேந்திரன் (55) புற்றுநோயால் பாதிப்பு, தாய் சுஜிதா (45) தைராய்டு நோயால் பாதிப்பு, மகள் தான்ய லட்சுமி (20) மனநலம் பாதிப்பால் மூன்று பேரும் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், மூன்று பேரும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மூன்று உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூன்று பேரும் உடல்நிலை பாதிப்பு காரணமாக தற்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.