தென் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடானா சமோவாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆப்பியாவின் தென்கிழக்கே 400 கிலோமீட்டர் தொலைவில் 314 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், நிலநடுக்கத்தை தொடர்ந்து சமோவா தீவிற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
2009ம் ஆண்டு சமோவா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் தாக்கின. இந்த சம்பவத்தில் சமோவா தீவில் 192 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.