2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் நேரத்தை 50 நிமிடங்களாக அதிகரிப்பதை மாணவர்கள் பொறுத்துக்கொள்வது கடினமாக இருக்கலாம் என்பதால், இதுபோன்ற இரண்டு இடைவேளைகள் வழங்கப்படும் என்றும் துணை இயக்குநர் கூறியுள்ளார்.
மேலும், வகுப்பு நேர அட்டவணைகள் காலை 7:40-8:30, 8:30-9:20, 9:20-10:10, 10:30-11:20, 11:20-12:10 PM, 12:20-1:10, 1:10-2:00 PM என திருத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தள்ளார்.
“புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தொடக்கக் கல்வியில் பின்வரும் பாடங்கள் அடங்கும்,
அடிப்படை அறிவியல், தாய்மொழி, ஆங்கிலம், இரண்டாம் மொழி, கணிதம், மதம், மதிப்பீகல்வி, சுற்றுச்சூழல் தொடர்பான செயல்பாடுகள், ஒருங்கிணைந்த அழகியல் பாடங்கள், சுகாதாரம் மற்றும் உடற்கல்வி என்பனவாகும்.
