சற்று முன் அரச பேரூந்து விபத்து-பயணிகளின் கதி..!

 

காலி - உடுகம வீதியில் குருந்துவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (30) பிற்பகல் மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இ.போ.ச பஸ் - கார் மோதி விபத்து | Bus Car Collision Accident

கார் ஒன்று முன்னால் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காரின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரின் சாரதி மது போதையில் இருந்ததால் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.