Type Here to Get Search Results !

யாழில் இரு பிள்ளைகளின் இளம் தந்தை தவறான முடிவு-வெளியான அதிர்ச்சி காரணம்..!

யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி – அச்செழு சூரசிட்டி பகுதியைச் சேர்ந்த அன்ரன் சுதாகரன் (வயது 28) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபருக்கும், அவரது மனைவிக்குமிடையே கடந்த 2 ஆம் திகதி முரண்பாடு ஏற்பட்ட நிலையில் மனைவியைத் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த மனைவி கோப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று 4 ஆம் திகதி வீடு திரும்பிய நிலையில் தாயார் வீட்டிற்குச் சென்று அங்கிருந்துள்ளார்.

இதனால் மனவிரக்தியடைந்த கணவன் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad