இடுகைகள்

முல்லை மண்ணில் இரவில் பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி-துரத்தி பிடித்து நையபுடைத்த மக்கள்..!{படங்கள்}

  

மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்னை வழிமறித்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த கொள்ளையர்கள் இருவர் ஊர்மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் (15) இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு – முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் உள்ள வளர்மதி மைதானத்திற்கு அருகாமையில் நேற்று இரவு 7 மணியளவில் வீதியால் பயணித்தபோது இனந்தெரியாத கொள்ளையர்கள் இருவர் குறித்த பெண்னை வழிமறித்து கழுத்தில் கத்தியினை வைத்து மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுண் தங்க சங்கலியை பறித்து கொண்டு தப்பி சென்றிருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக குறித்த கிராம மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதனையடுத்து ஊர்மக்கள் இணைந்து கொள்ளையர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் 32, 22 வயதுடைய தர்மபுரம் விசுவமடு பகுதியினை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post