களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பலாத்தோட்ட - நாகொடை வீதியின் எட்டவில பகுதியில், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒரே திசையில் முன்னாள் பயணித்த கார் ஒன்றை ஒன்றாக முந்திச் செல்ல முற்பட்ட வேளை ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் பின்னால் அமர்ந்து சென்ற ஒருவர் உயிரிழந்தார்.உயிரிழந்தவர் வெலிபென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
.jpeg)