ஆடிப்பெருக்கு-இன்றைய ராசிபலன்..!{3.8.2025}

 

ஞாயிற்றுக்கிழமை, 3 ஆகஸ்ட் 2025
மேஷம்
aries-mesham
வம்படியாக புதிய பொறுப்புகளை ஏற்க நேரும். இன்று, வேலைகளைப் பொறுத்தவரை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது.
ரிஷபம்
taurus-rishibum
மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி ஏற்படும். சாதுர்யமான வாக்கு வன்மையால் சம்பாத்தியம் உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திருப்திகரமான வரவு உண்டு.
மிதுனம்
gemini-mithunum
புதிய விரிவாக்க முயற்சிகளால் வியாபாரம் களைகட்டும். நண்பர்களின் உதவி கிடைக்கும். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம், வங்கிக் கடன் உதவியால் நிறைவேறும்.
கன்னி
virgo-kanni
பெரியவர்கள் ஆசி கிடைத்து வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொழுதுபோக்கான விஷயங்களில் மனதை செலுத்துவது நல்லது. பிறர் ஒத்துழைப்பால் ஆதாயம் அடைவீர்கள்.
மகரம்
capricorn-magaram
தனவரவு சிறப்பாக இருக்கும். புதிய சொத்து சேர்க்கைகள் ஏற்படும். மனைவியுடன் கழிக்கும் காலங்கள் மகிழ்ச்சி மிக்கதாக அமையும். கலைஞர்களின் வருமான அளவு உயரும்.
கடகம்
cancer-kadagam
பலவழிகளிலும் வருமானம் இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகளை அனுசரித்து செல்லாவிட்டால், அல்லல்படும் நேரம். எச்சரிக்கை உணர்வோடு வாகனப் பயணங்களை மேற்கொள்வது நல்லது.
சிம்மம்
leo-simmam
குடும்பத்தோடு குதுகலமாக பொழுதைக் கழித்து, கவலைகள் மறையும். ஒரு நாள் கழிவது ஒரு யுகம் கழிவது போன்றிருக்கும். நீர்நிலைகளில் எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
துலாம்
libra-thulam
வருமானம் சுமாரான அளவுக்கு இருக்கும். குடும்பத்தில் உள்ளவரை அனுசரித்துச் செல்லாவிட்டால், அல்லல்படும் நேரம். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது.
மீனம்
pisces-meenam
ஆன்மீக சிந்தனைகள் அதிகரித்து மனதில் அமைதிக்கு வழிவகுக்கும். சிலர் மடியில் மழலை தவழக் கூடிய மகிழ்ச்சி மிக்க காலம் கனியும். தீர்த்த யாத்திரைகள், மூலம் சந்தோஷம் நிலவும்.
தனுசு
sagittarius-thanusu
அதிகாரிகள் மனம் திருப்தி அடையும் வகையில், கடமை உணர்வுடன் செயல் பட்டு அவர்களின் மனம் கவர்வீர்கள். பெண்களால் வீண் செலவுகள் ஏற்படும். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
திருமணத்திற்கு நீண்ட நாளாக காத்திருந்தவர்கள் வீட்டில், மேளச்சத்தம் கேட்கும். தொழில் துறையினருக்கு பெரிய அளவில் உற்பத்திப் பெருக்கம் ஏற்படும். பணியில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை ஓரளவு குறையும்.
கும்பம்
aquarius-kumbam
இன்றைய நாள் காரியம் வெற்றியோடு, களிப்பும் அதிகரிக்கும் . அரசு ஆதரவு இருக்கும். கல்வியில் தேர்ச்சி உண்டு. தன்னம்பிக்கை, தைரியம் கூடும் அதிகாரம் மிக்க பதவி உயர்வு ஏற்படலாம்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post