பொகவந்தலாவ பொலிஸ் பிரிவில் உள்ள கிவ் தோட்ட கீழ் பிரிவில் 8 வயதுடைய சிறுவன் கழிவு நீர் குழியில் விழுந்து உயிரிழந்துள்ளான்.
இச் சம்பவம் நேற்று மாலை 7 மணிக்கு இடம்பெற்று உள்ளது என பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கபட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
