தெஹிவளையில் வீதிகளில் இருந்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒன்பது பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
26 முதல் 51 வயதுக்கு உட்பட்ட இந்த சந்தேக நபர்கள், ரத்மலானை, மஹரகம, டெஹிவளை மற்றும் மொரட்டுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.மவுண்ட் லவீனியா பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் நேற்றிரவு (10) டெஹிவளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக டெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
