யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிசார் பெருந்தொகை கஞ்சாவுடன் இருவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
நேற்று (11) மதியம் 2 மணியளவில் அறுகுவெளி பகுதியில் கஞ்சாவுடன் இருவரையும் பொலிசார் கைது செய்தனர்.
படகில் கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்ட கஞ்சாவை பற்றைக்காட்டுக்குள் மறைத்து வைத்திருந்தபோது, பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அந்த பகுதியை சுற்றிவளைத்து இருவரையும் கைது செய்தனர். 126 பொதிகளில் கஞ்சாவும் மீட்கப்பட்டது. இது 200 கிலோகிராமுக்கு அதிகமான நிறையுடையதாக இருக்கலாமென கருதப்படுகிறது.
மீட்கப்ட்ட கஞ்சாவின் நிறையை கணக்கிட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் சுலக்சன் என்ற வர்த்தகரும் கைதானார். அவர் சமூக செயற்பாட்டாளர் என கூறி வந்ததுடன், கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார். கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அவர் சுயேச்சைக்குழுவொன்றையும் களமிறக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
