இலங்கையில் முதன் முறையாக ஏற்பட்ட அதிரடி மாற்றம்..!

புதிய பதிவாளர் நாயகமாக முதலாவது பெண் பதிவாளர் நாயகம் நியமிப்பு. இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிருவாக சேவையின் அதி விசேட தரமுடைய திருமதி சசிதேவி ஜலதீபன் அவர்கள் நியமிக்கப்பட்டு இன்று 2025.08.25ந் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். 2003ம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் இணைந்து கொண்டது முதல் 2023.12.01 முதல் 2006.05.31 வரை திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் உதவிப் பிரதேச செயலாளராவும், 2006.06.01 முதல் 2015.03.17 வரை பிரதேச செயலாளராகவும், 2015.03.18 முதல் 2018.04.04 வரை பொலன்நறுவை மாவட்டத்தின் திபுலாகல பிரதேச பிரதேச செயலாளராகவும், 2018.04.05 முதல் 2019.12.01 வரை தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, இளைஞர் விவகார வடக்கு அபிவிருத்தி அமைச்சினது சிரேஸ்ட உதவிச் செயலாளராகவும், 2019.12.02 முதல் 2020.08.14 வரை தேசிய கொள்கைகள் இராஜாங்க அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளராகவும், 2020.08.15 முதல் 2021.09.30 வரை நிதி மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறு சீரமைப்பு இராஜாங்க அமைச்சினதும் சிரேஸ்ட உதவிச் செயலாளராகவும், 2021.10.01 முதல் 2024.03.17 வரை கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளராகவும், 2024.03.18 முதல் 2025.08.22 வரை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் மேலதி செயலாளராகவும் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவரின் நியமனத்திற்கு வாழ்துக்களை திருகோணமலை மாவட்ட மக்கள் சார்பாகவும் தமிழ் பிளஸ் செய்திப் பிரிவு சார்பாகவும் தெரிவித்துக்கொள்கின்றோம்



இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post