யாழில் பயங்கரம்-ஒருவர் வெட்டி கொலை-தடுக்க சென்றவர்களுக்கும் நேர்ந்த சோகம்..!

 

யாழ்ப்பாணம், புங்குடுதீவில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு, முதலாம் வட்டாரத்தில் நேற்று (10) இரவு 7.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

பேருந்து உரிமையாளரான அகிலன் என்பவரே கொல்லப்பட்டார். அவர் வீட்டிலிருந்த போது, ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், வாள்களால் அவரை கொடூரமாக வெட்டினர். அதை தடுக்க வந்த அயல்வீட்டில் வசிக்கும் உறவினரான இளைஞனும், இரண்டு பெண்களும் காயமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அகிலன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களின் தகவலின்படி, அதே பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை பொலிசார் தேடி வருகின்றனர். அந்த நபர், உயிரிழந்தவருக்கு ஏற்கெனவே சிலமுறை கொலை மிரட்டல் விடுத்து, அது குறித்து பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். தனது உறவினரை கத்தியால் குத்தி காயப்படுத்தியதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர், அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் கூறுகின்றனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post