உந்துருளி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நீர்கொழும்பு – குடாப்பாடு பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பு – குடாப்பாடு பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த உந்துருளி வீதியை விட்டு விலகி அருகில் இருந்த வீடொன்றின் மதில் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த உந்துருளியின் செலுத்துனர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
