யாழை உலுக்கிய விபத்து-சற்று முன் உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான தகவல்..!

 

யாழ் கொடிகாமம் விபத்தில் வீதியோரம் நின்று மோட்டார்சைக்கிளை பழுது பார்த்துக்கொண்டு இருந்த குடும்பஸ்தர் பரிதாபமாக மரணம்.

நேற்றிரவு 7 மணியளவில் யாழ்ப்பாணம் கொடிகாமம் ஆசைப் பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில் 4 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் திருகோணமலை அலஸ்தோட்டத்தை பிறப்பிடமாகவும் யாழ் கொடிகாமத்தில் திருமணம் முடித்து வாழ்ந்து வரும் 5 பிள்ளைகளின் தந்தையான குணரெட்னம் ரோபின்சன் எனும் 36 வயதான குடும்பஸ்தரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது யாழ் கொடிகாமம் வீதியூடாக குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மோட்டார்சைக்கிள் திடீரென பழுதடைந்த நிலையில் வீதியோரமாக மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு பழுதை திருத்திக்கொண்டிருந்த சமயம்  வீதியால் பயணித்த வாகனங்களான கூலர் கார், லொறி என்பன ஒன்றோடு ஒன்று மோதிய நிலையில் வீதியோரம் நின்றிருந்த குறித்த இளைஞன் மீதும் மோட்டார்சைக்கிள் மீதும் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது  இதில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார் இவ் விபத்தில் கார் மற்றும் கூலரில் பயணித்த 4 பேரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

சாரதிகள் விடும் சிறு சிறு தவறுகளால் அப்பாவி உயிர்கள் நாளுக்கு நாள் பலி எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. 


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Related Post
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post