யாழ் பருத்தி்துறை சாரையடிப்பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவர்கள் மீது கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
வரணிப் பகுதியைச் சேர்ந்தவர்களே குறித்த கும்பலுடன் வந்து தமது வீட்டில் உள்ளவர்களைத் தாக்கியதாகவும் அது தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்ட போது குறித்த கும்பலை கூட்டி வந்த குடும்பத்தினர் சிலரை கைது செய்து பிணையில் விட்டுவிட்டார்கள் என்பதுடன் தாக்குதல் மேற்கொ்ண்டவர்களை பொலிசார் கைது செய்யவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள் .
