பசறையில் கோர விபத்து-மூச்சு பேச்சின்றி கிடந்த சிறுவன்-விடாமுயற்ச்சி செய்த வைத்தியர்கள்-இருந்தும் கவலைக்கிடம்..!{படங்கள்}

 பசறை வைத்தியசாலையின் வைத்திய தலைமை அதிகாரி ஜானக கல்கந்த உட்பட்ட குழுவினரின் விடா முயற்சியால் காப்பாற்றப்பட்ட 9 வயது சிறுவனின் உயிர். 

பசறை அம்மணிவத்தை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். 

பசறை பக்கம் இருந்து மீதும் பிடி பக்கமாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பசறை அம்மணிவத்தை பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட சிறுவன் ஒருவன் மீது மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது 

 சிறுவன் அயலவர்களினால் உடன் பசறை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் , கொண்டு செல்லும் போது சிறுவனிடம் எதுவிதமான உணர்வுகளும் இல்லை எனவும் பசறை வைத்தியசாலையின் வைத்தியர்களின் பாரிய முயற்சியினால் சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் சிறுவன் ஆபத்தான   நிலையில்  பதுளை வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டு அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிறுவனின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பசறை வைத்தியசாலையின் தலைமை அதிகாரி ஜானக கற்பித்த தெரிவித்தார்.

மேலும் மோட்டார் சைக்கிளை செலுத்திய வந்த நபர் பசறை பக்கம் இருந்து மீதும் பிடி பக்கமாக சென்று கொண்டிருந்த போது அம்மணிவத்தை கூட்டுறவு சங்க கடைக்கு முன்பாக சிறுவன் வீதியை கடக்க முற்பட்ட போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இருப்பினும் மோட்டார் சைக்கிளை செலுத்திய 23 வயதுடைய மெதவெலகம பகுதியை சேர்ந்த நபர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பசறை பொலிஸார் தெரிவித்தனர்.