புலம்பெயர் அகதி நாய்களே உங்கள் நாட்டுக்கு செல்லுங்கள்-இந்திய அகதி சிறுமி மீது கொடூர தாக்குதல் நடத்திய வெள்ளைக்கார சிறுவர்கள்-தாய் மண்ணின் இருப்பை தொலைத்தால் இதுதான் நிலை..!

 

மேற்கத்தைய நாடுகளில் சமீபகாலமாக புலம்பெயர் அகதிகள் மீதான இனவெறித் தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் மூன்று தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது.

இந்த நிலையில் இந்திய அகதி சிறுமி மீது தாக்குதல் நடந்துள்ளது. 

கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்தவர் அனுபா அச்சுதன். இவர் அயர்லாந்தில் 8 ஆண்டுகளாக தாதியாக பணியாற்றி வருகிறார். அவர் தனது கணவர், 2 குழந்தைகளுடன் தென்கிழக்கு அயர்லாந்தில் உள்ள வாட்டர் போர்டு நகரில் வசித்து வருகிறார்.

அனுபாவின் 6 வயது மகள் நியா வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது அவரை சில சிறுவர்கள் சரமாரியாகத் தாக்கினார்கள். 

சிறுமியின் முகம் உட்பட பல இடங்களில் தாக்கினர். பின்னர் அகதி நாய்களே இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள் என்று கூறிவிட்டு தப்பிச் சென்றனர்.

இது தொடர்பாக சிறுமியின் தாய் அனுபா பொலிஸில் முறைப்பாடு செய்தார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவார்கள். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post