இலங்கையர்களுக்கு அடித்த அதிஷ்டம் கனடாவில் இனி இலகுவாக வதிவிடம் பெறலாம்

கனடா நிரந்தர வதிவிட விண்ணப்பதாரர்களுக்கான ஆங்கில சோதனைகளில் புதிய மாற்றம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய, TOEFL Essentials எனும் புதிய தெரிவை கனடா அரசாங்கம் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியா, இலங்கை உள்ளிட்ட பட நாடுகளிலிருந்து நிரந்தர வதிவிட உரிமைக்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர் அதிக வசதியை பெற முடியும். TOEFL Essentials test தற்போது Express Entry உள்ளிட்ட முக்கிய வதிவிட வழிகளுக்குப் பொருந்தும். இதில் Federal Skilled Worker Program, Federal Skilled Trades Program மற்றும் Canadian Experience Class ஆகியவை அடங்கும். Atlantic Immigration Program மற்றும் பல மாநில தெரிவு திட்டங்களிலும் (PNPs) இந்த தெரிவு ஏற்கப்படும். ஆனால், மாநிலங்கள் தனித்தனியாக முடிவெடுப்பதால், அங்குள்ள விதிகள் மாறுபட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், TOEFL Essentials test குறித்த கீழ்வரும் முக்கிய தகவல்கள் கவனிக்கப்பட வேண்டியவை,

இந்த தெரிவு 90 நிமிடங்கள் நீளமுடையது கேட்கும் திறன், வாசிப்பு, எழுத்து, மற்றும் பேசும் திறன் ஆகிய நான்கு பகுதிகளையும் மதிப்பீடு செய்கிறது தெரிவுக்குப் பின் கேட்கும் மற்றும் வாசிப்பு திறனுக்கான முடிவுகள் உடனே கிடைக்கும் முழுமையான மதிப்பீடு 6 நாட்களில் வெளியிடப்படும்


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post