இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (25) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தீவின் பிற பகுதிகளில் பெரும்பாலும் மழை இல்லாத வானிலை நிலவும் என வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னலினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
