பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியிடம் பாலியல் சேட்டை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மிகவும் பின் தங்கிய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல் சேட்டை விட்டு வந்த நபர் மீது மாணவியின் தாயார் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்ததைத் தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து ஹட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
சந்தேக நபரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பணித்துள்ளார்.
இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவிக்கையில், சந்தேக நபர் திருமணம் முடித்து ஒரு குழந்தையின் தந்தை எனவும் பாடசாலை மாணவி தனக்கு சந்தேக நபரால் ஏற்படும் தொல்லை பற்றி தனது தாயிடம் கூறியதைத் தொடர்ந்து, தாய் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டது எனக் கூறினார்.
