முத்தையன்கட்டில் இராணுவ முகாமிற்கு சென்ற இளம் குடும்பஸ்தரின் இறுதி ஊர்வலம். பொலிஸார் விஷேட அதிரடி படையினர் விஷேட பாதுகாப்பு.
முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியபோது தப்பியோடி சடலமாக மீட்கப்பட்டவரின் உடலம் இன்றையதினம் (11.08.2025) அடக்கம் செய்யப்பட இருக்கும் நிலையில் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என குறித்த பகுதி இளைஞர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து 07.08.2025 அன்று இரவு 7.30 மணியளவில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டட்டு ஐவர் முகாமிற்கு சென்றநிலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நால்வர் தப்பியோடிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இறந்தவவரின் உடலம் இன்றையதினம் 1 மணியளவில் அடக்கம் செய்ய இருக்கும் நிலையில் கலகம் ஏற்படலாம் என்ற சந்தேகத்தில். பொலிஸார்,விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.







