பாடசாலை மலச கூடத்தில் மூன்று ஆசிரியர்கள் மாணவியை மாறி மாறி நடந்த கொடூரம்..!

 கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகேயுள்ள ஒரு அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் 13 வயது மாணவி ஒருவர் மூன்று ஆசிரியர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம், பொதுமக்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூர சம்பவம், கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பு அமைப்புகள் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு திடீரென கடுமையான வயிற்று வலியும் மயக்கமும் ஏற்பட்டதை அடுத்து, அவரது தாயார் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

மருத்துவப் பரிசோதனையில், மாணவியின் வயிறு முழுவதும் புண்ணாகி இருப்பது தெரியவந்தது. மருத்துவர்கள் மாத்திரைகளை பரிந்துரைத்து வீட்டிற்கு அனுப்பினர்.

ஆனால், உடல்நலக் குறைவை காரணம் காட்டி மாணவி ஒரு வாரத்திற்கு மேல் பள்ளிக்கு செல்ல மறுத்தார். இதனால் சந்தேகமடைந்த தாய், மாணவியிடம் விசாரித்தபோது, நெஞ்சை உலுக்கும் உண்மைகள் வெளிப்பட்டன.

கொடூரத்தின் விவரங்கள்

புத்தாண்டு மறுநாளான ஜனவரி 2-ம் தேதி, வகுப்பறையில் ஆங்கிலப் பாட வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, மாணவி இயற்கை உபாதைக்காக கழிவறைக்கு சென்றார்.

ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிவறைக்கு சென்ற மாணவியை, அங்கு மறைந்திருந்த கணித ஆசிரியர் ஆறுமுகம் அநாகரிகமாக நடந்து கொண்டு, பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மறுநாள், அதே கழிவறைக்கு சென்றபோது, அறிவியல் ஆசிரியர் சின்னசாமி மாணவியை மிரட்டி, தனது இச்சையை தீர்த்துக் கொண்டதாக தெரிகிறது. அதே நாள் மதியம், நான்காம் வகுப்பு ஆசிரியர் பிரகாஷ் மாணவியை கழிவறையில் வைத்து மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது.

ஜனவரி 3-ம் தேதி, மாணவியின் தாய் இந்த கொடூரங்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வியிடம் தெரிவித்தார். முதலில் நம்ப மறுத்த தலைமை ஆசிரியர், மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது, சம்பவத்தின் உண்மைத்தன்மை உறுதியானது.

அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மூன்று ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post