யாழ்ப்பாணம் - கேரதீவில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒரு மோட்டார் சைக்கிளில் நால்வர் பயணித்த நிலையில் நிலைதடுமாறி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில், சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன் ஏனைய மூவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். தென்மராட்சி - மந்துவிலைச் சேர்ந்த 5 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
