சற்றுமுன் மீண்டும் அதிர்ந்த நாடு-ஆடிய கட்டிடங்கள்-வீதிக்கு ஓடிய மக்கள்..

 


தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் கராகசுக்கு மேற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜூலியா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது. 7.8 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த பயங்கர நிலநடுக்கம் பக்கத்து மாகாணங்களிலும் உணரப்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. உடனே பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அண்டை நாடான கொலம்பியாவிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post