Type Here to Get Search Results !

வவுனியாவில் டிப்பர் மோதி தூக்கி வீசப்பட்ட பெண் டிப்பருடன் சாரதி தப்பியோட்டம்..

 


வவுனியா கொறவப்பொத்தானை வீதியில் விபத்தை ஏற்படுத்திய டிப்பர்வாகனம் நிறுத்தாமல் சென்றுள்ளதுடன் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.


குறித்தவிபத்து வவுனியா தினச்சந்தை கட்டடத்திற்கு முன்பாக உள்ள பாதசாரிகள் கடவைக்கு அருகில் இன்று இரவு8.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.


விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்; மோட்டார்சைக்கிளில் சென்ற குறித்த பெண் புறப்படுவதற்கு தயாராக வீதியின்கரையில் நின்றுள்ளார். இதன்போது வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் இருந்து கொறவப்பொத்தானை திசைநோக்கி சென்ற டிப்பர் வாகனம் அவரை மோதியுள்ளது. விபத்தில் குறித்த பெண் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட நிலையில் காயமடைந்திருந்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad