இளைஞன் மீது கத்திக்குத்து தாக்குதல் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு வண்ணார் பண்ணை நொச்சியம் பதி பத்திரகாளி அம்மன் கோயில் அருகில் இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் தலையில் இரும்பு கம்பி தாக்குதலுக்கு உள்ளாகியும் வயிற்றில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இக்காகியும் 33 வயது உடைய ரவீந்திரன் கமில்ரன் வயது(33) , பலாலி தெற்கு வயாவிளான் பகுதியை சேர்ந்த நபர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நண்பன் ஒருவனை பார்ப்பதற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பொழுது, அடையாளம் தெரியாத நபர்களினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு ள்ளது. சம்பவம் இடம்பெற்ற சிறிது நேரம் பொலிசார் அந்த பகுதியில் காயமடைந்த இளைஞனுடன் வந்த நபர் ஒருவரை கைது செய்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை பொலிஸார் அடியாட்களை வைத்து மேற்கொண்டதாக உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
