பேருந்து வளைவில் செல்லும் போது சாரதி பிரேக் பிடிக்குது இல்லை என்றார் நடத்துனரும் மற்றவர்களும் சிரித்தபடி பொய் சொல்கிறார் என்றார்கள். அடுத்த வளைவில் செல்லும் போது தான் பொய் சொல்லவில்லை. உண்மையை சொல்கிறேன் என்றார். திடீரென்று பேருந்தை நிறுத்த தொடங்கிய போது எனக்கு உண்மையில் பிரச்சினை இருப்பது தெரிந்தது. நான் இன்ஜின்பகுதி மேல் இருந்தேன் நான் அப்போதே முடிந்துவிட்டேன் என நினைத்தேன். நான் சுயநினைவு பெற்று கண்களைத் திறந்தபோது நான் உயிருடன் இருக்கிறேன் என எல்ல – வெல்லவாய பேருந்து விபத்தில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் கருத்து தெரிவித்தார்.
