சிகிச்சைக்கு சென்ற பெண்ணை நிர்வாணமாக்கி - பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி ஊழியர் செய்த கேவலம்..!

 


 தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணை மயக்க ஊசி செலுத்தி பாலியல் பலாத்காரம் செய்த லேப் டெக்னீசியனை பொலிஸார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஜகத்தியால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.


இதன் போது அம்மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் பெண்ணுக்கு ஊசி போட வேண்டும் எனக்கூறி இளம்பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டுள்ளார். மயங்கிய அப்பெண்ணை அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அறையில் இருந்து அவர் வெளியே சென்றவுடன் இளம்பெண்ணின் பெற்றோர் உள்ளே சென்று பார்த்த போது தங்களது மகள் மயங்கிய நிலையில் அலங்கோலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களிடம் தற்போது வந்து சென்றவர் யார் என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து பொலிஸில் புகார் கொடுத்ததுடன் அதன் அடிப்படையில் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். மேலும் அவர் வைத்திருந்த தொலைபேசியை சோதனை செய்தபோது அதில் ஆபாச படங்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பொலிஸார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post