அனைத்து அரச ஊழியர்களுக்கும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பேருந்து நிலைய அபிவிருத்தி தொடர்பான நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பேருந்து நிலையங்களில் அதிகமாக வேலை செய்பவர்களுக்கு அதிக ஊதியம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்
இந்த நிறுவனங்கள் மக்களுக்கு முழுமையாக சேவை செய்யும் திறமையான நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
