சற்றுமுன் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

 


இன்று முதல் அமுலாகும் வகையில் இந்தியாவில் ஜி.எஸ்.டி வரியில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. 


வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில், நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி. எனப்படும் பண்டம் மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. 


இதன்படி 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி 5 மற்றும் 18 என இரு அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. 


முன்னதாக இந்தியர்களின் சேமிப்பு வீதம் தொடர்ந்து குறைந்து, கடன் சுமை அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. 


எனவே இதனை சமநிலைப்படுத்தும் நோக்கில் இந்திய மத்திய அரசு இந்தாண்டு பட்ஜெட்டில் 12 லட்சம் ரூபாய் வரையான வருமானத்திற்கு வருமான வரி தள்ளுபடியை அறிவித்தது. 


அதன் தொடர்ச்சியாக தற்போது, ஜி.எஸ்.டி. வரியிலும் பெரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


அதன்படி தற்போது 5 மற்றும் 18 என்ற 2 வரி விகிதங்களாக எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன. 


அதனால் 12 சதவீதத்தில் இருந்த 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரிக்கும், 28 சதவீதத்தில் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவீதத்திற்கும் வருகின்றன. 


இந்நிலையில் இந்த புதிய வரி நாளை முதல் அமலுக்கு வர உள்ளதால், அன்றிலிருந்து மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைய உள்ளன.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post