கனேமுல்லை சஞ்சீவ கொலையில் நேபாளத்தை கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் வெளிவந்துள்ள பல தகவல்களினடிப்படையில் பல்வேறு வகையான கோணத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், இஷாராவின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும், அவருக்கு வேறு ஏதேனும் வங்கிக் கணக்குகள் உள்ளதா? என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளும் இடம்பெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
