"Be aware" - 🔴 அவதானம்!
மஸ்கெலியாவில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வாங்கிய பொதி செய்யப்பட்ட கேக்கினுள் இறந்த நிலையில் பல்லி காணப்பட்டுள்ளது.
கேக்கை சாப்பிட்ட, 5 வயது பெண் குழந்தையும், 03 வயது ஆண் குழந்தையும் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முடிந்தவரை பொதி செய்யப்பட்ட உணவுகளை வாங்காது இருப்பது நல்லது. பொதி செய்யப்பட்ட உணவுப்பொருட்களுக்குள் நுகர்வுக்கு பொருத்தமற்றவை நீண்ட நாட்களாக இருக்கும் போது அந்த உணவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும்.
அன்றாடம் நாம் சாப்பிடும் சில உணவுகளில் வேறு வேறு உணவுகளை ஒன்றாக சேர்ந்து சாப்பிடும் போதே பல நேரங்களில் ஒவ்வாமை ஏற்படுகிறது.
இப்படியிருக்கையில் இப்படியான பொதி செய்யப்பட்ட உணவுகளை வாங்க முதல் யோசித்து வாங்குங்கள்.
இப்படியான உணவுகளை விற்பவர்கள் சட்டத்தை ஏமாற்றி, மீண்டும் மீண்டும் தமது தயாரிப்புகளை விற்பனை செய்து கொண்டு தான் இருப்பார்கள்.
ஆனால் இழப்பு அதை வாங்கி உண்ணும் நுகர்வோருக்கு தான்.


