யாழில் கேள்விக்குறியாகும் பெண்களின் பாதுகாப்பு வாய்பேச முடியாத பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

 


யாழில் வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வாய்பேச முடியாத பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் அல்லைப்பிட்டி கடற்பரப்பில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த மாதம் 27 ஆம் திகதி குறித்த பெண் வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் வீட்டிற்குள் புகுந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார். எனினும் அவரிடம் இருந்து அந்த பெண் தப்பிச் சென்று தமது உறவினர்களுக்கு அறியப்படுத்திய நிலையில், பெண்ணின் உறவினர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேகநபர் தலைமறைவாகியிருந்ததுடன் அவரை தேடி பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையிலேயே சந்தேகநபர் அல்லைப்பிட்டி கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இதனை அடுத்து சந்தேகநபர் இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். அதேவேளை கடந்த ஞாயிற்கு கிழமை சங்குபிட்டி பாலத்தில் பெண் ஒருவர் கடும் காயங்களுக்குள்ளாகி கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post