ஈக்வடோரின் குவைரண்டா - அம்பாடோ வீதியில் நடந்த கோர விபத்தில் 20 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஈக்வடோரில் உள்ள முக்கிய வீதிகளில் ஒன்றான குவாரந்தா - அம்பாடோ வீதியில் பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது. பேருந்து, சிமியாடுக் பகுதியில் உள்ள மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து அருகில் இருந்த ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் பயணித்த 20பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த பயணிகள் மீட்கப்பட்டு, அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் ஈக்வடோரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான சரியான காரணங்கள் குறித்து அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
