துபாயில் இடம்பெற்று வரும் விமான சாகச கண்காட்சியின் போது விழுந்து நொறுங்கிய இந்திய போர் விமானம் துபாயில் நடைபெறும் விமான கண்காட்சியில் இன்று பிற்பகல் இறுதி டெமோவின் போது, இந்திய தேஜாஸ் விமானம் என்று நம்பப்படும் ஒரு போர் விமானம் விபத்துக்குள்ளானது. மீட்பு நடவடிக்கைகள் உடனடியாகத் தொடக்கப்பட்டது, நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதோடு பார்வையாளர்கள் கண்காட்சிப் பகுதிக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். விமானி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது
