ஆபரணத் தங்கத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து வந்த நிலையில், தொடர்ந்து குறைந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களில் அதிகரித்து, சில தினங்களில் குறைந்தும் வருகின்றது. இந்நிலையில், இன்று சவரனுக்கு 800 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினம் கிராம் ரூ.11,600 ஆகவும், சவரன் ரூ.92,800 ஆகவும் இருந்து வந்தது. தற்போது சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, 11,500 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 800 குறைந்து, 92,000 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இதே போன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.173.00ஆகவும், கிலோவிற்கு ரூ.1,73,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது. இலங்கையிலும் ஆபரணத்தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 3,53,760, அதுவே கிராமிற்கு ரூ.44,220 க்கு விற்கப்படுகின்றது. மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 3,24,320க்கும் ஒரு கிராமிற்கு ரூ. 40,540க்கு விற்கப்படுகின்றது. இலங்கையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு 516.33 LKR என்றும் ஒரு அவுன்ஸிற்கு 16,059.53 LKR என்று விற்பனை ஆகின்றது.
