ஆபாச காணொளியில் தாய்-நடுகாட்டில் கிடந்த சடலம்-நீதிக்காக போராடிய மகன்..!

 

ஒடிசா மாநிலத்தில் 2016-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொடூர சம்பவம், இன்றும் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்துவதாக உள்ளது. சினிமாவில்கூட இதுவரை பார்க்காத அளவுக்கு கொடூரமான இந்த கொலை வழக்கு, ஒரு ஆபாச வீடியோவின் மூலம் தீர்க்கப்பட்டது.


இதில் முக்கிய பங்கு வகித்தது, உயிரிழந்த பெண்மணியின் இளம் மகனும் அவனது நெருங்கிய நண்பனும் தான். தாயை இழந்த துயரத்தில் இருந்தாலும், நீதிக்காக அசாத்திய போராட்டம் நடத்திய அந்த மகனின் கதை, உண்மையில் உத்வேகம் அளிப்பதாக உள்ளது.


2016-ஆம் ஆண்டு, ஒடிசாவின் ஒரு சிறிய நகரத்தில் வசித்து வந்த சுமித்ரா பாரிக் திடீரென காணாமல் போனார். அவரது கணவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் நான்கு மாதங்கள் கழித்தே, அடர்ந்த காட்டுப்பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.


விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் வழக்கு கிடப்பில் போடப்பட்டது. சுமித்ராவின் 12 வயது மகன் பிரத்யும்மன், தாயை இழந்த துயரத்தில் ஆழ்ந்தான். ஆனால் அவன் மனதில் ஒரே எண்ணம் – தாயின் மரணத்துக்கு நீதி கோருவது.

தாயின் மரணத்திற்கு காரணம் என்ன..? யார் செய்திருப்பார்கள்..? என்று அவன் நினைத்து பார்க்காத நாளே இல்லை. கடந்த நவம்பர் மாதம் 20-ம் தேதி, இவனுடைய கவலைக்கு தீர்வு ஏற்பட்டது.

பிரத்யும்னின் நெருங்கிய நண்பனான ராம் தேஜ் சாஹு, அடிக்கடி பிரத்யும்னின் வீட்டுக்கு வந்து செல்பவன். சுமித்ராவின் புகைப்படங்களை பலமுறை பார்த்ததால் அவரது முகம் ராம் தேஜின் நினைவில் ஆழமாகப் பதிந்திருந்தது. 


கடந்த நவம்பர் மாதம் 20-ஆம் தேதி, ராம் தேஜ் பிரத்யும்னை சந்தித்து, மிகுந்த தயக்கத்துடன் ஒரு ரகசியத்தை வெளிப்படுத்தினான்.

“நான் ஒன்னு சொல்லுறேன்.. நீ தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம். நான் ஒரு ஆபாச வீடியோ பார்த்தேன். அதில் வரும் பெண் உன் அம்மாவைப் போலவே இருக்கிறார். உன் அம்மா காணாமல் போனது பற்றி நீ அடிக்கடி சொல்லுவியே.. இந்த வீடியோ உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்,” என்று கூறி வீடியோவை கொடுத்தான்.


பிரத்யும்மன்வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். அது தனது தாய் சுமித்ரா தான் என்பதை உறுதிப்படுத்தினான். மேலும், வீடியோவில் சுமித்ராவுடன் இருந்த நபர், அவரது பிளாஸ்டிக் பாட்டில் நிறுவனத்தில் சக ஊழியரான சூர்யகாந்த் பிஸ்வால் என்பதும் தெரியவந்தது.


இந்த வீடியோவுக்கும் தாயின் மரணத்துக்கும் தொடர்பு இருக்கும் என்று நம்பினான் பிரத்யும்மன். ஆனால்,நேரடியாக காவல் நிலையத்துக்குச் செல்ல தயங்கினான். “இப்படி ஒரு வீடியோவை எப்படி காட்டுவது?” என்று தவித்தான். அப்போது ராம் தேஜுடன் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினான்.


இருவரும் சேர்ந்து தன்னுடைய பெற்றோர்களிடம் படிப்புக்காக புதிய கலர் பிரிண்டர் ஒன்றை வாங்கவேண்டும். நாங்கள் இருவரும் சேர்ந்து வாங்கிக்கொண்டு இருவரும் பயன்படுத்திக்கொள்வோம் என கூறி இருவரும் வீட்டில் இருந்து தலா 1500 ரூபாய் வாங்கி 3000 ரூபாயில் கலர் பிரிண்டர் ஒன்றை வாங்கினர்.

வீடியோவில் இருந்து சூர்யகாந்தின் புகைப்படங்களையும், சில காட்சிகளையும் பிரிண்ட் எடுத்தனர். 


“இந்தப் பெண்ணின் மரணத்துக்கும் இந்த நபருக்கும் தொடர்பு இருக்கிறது” என்று எழுதிய ஒரு மொட்டை கடிதத்தை காவல் நிலையத்துக்கு அனுப்பினர். இந்த கடிதம் காவல்துறையை உசுப்பேற்றியது. 2016 கேஸ்கட்டை எடுத்துகிட்டு வாங்க என்று சத்தம் போட்டார் காவல் ஆய்வாளர்.


தூசி படிந்த அந்த பழைய கேஸ்கட்டில் சுமித்ராவின் இறப்பு குறித்த விசாரணை விபரங்களை சோதனை செய்ய தொடங்கினர். தூசிகள் பறந்தன, விலகியது மர்மம்.


உடனடியாக சுமித்ராவின் கணவரையும் மகன் பிரத்யும்னையும் விசாரணைக்கு அழைத்தனர்.பிரத்யும்மன்தனது திட்டப்படி பதிலளித்தான்: “இந்த நபர் என் அம்மாவுடன் அதே நிறுவனத்தில் வேலை செய்தவர். இவருக்கு ஏதோ தெரிந்திருக்கும் அல்லது தொடர்பு இருக்கும்.” காவல்துறை சூர்யகாந்தைத் தேடிய போது, அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்துடன் மும்பைக்கு சென்றுவிட்டதாகத் தெரியவந்தது.மும்பை தனிப்படை போலீசார் அவரை கைது செய்து ஒடிசாவுக்கு கொண்டு வந்தனர்.


விசாரணையில் சூர்யகாந்த் உண்மையை போட்டுடைத்தார்: “நான் மட்டும் காரணம் இல்லை. என் மேனேஜர் ஜெகன்னாத் பட்நாயக்தான் முக்கிய காரணம்.” சுமித்ராவும் சூர்யகாந்தும் நிறுவனத்தில் நெருங்கிப் பழகினர். அது திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவாக மாறியது.


வாழ்க்கையை செட்டில் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்,மேனேஜர் ஜெகன்னாத், சூர்யகாந்த், சுமித்ரா மூவரும் சேர்ந்துஆபாச படங்களில் நடித்து அதை விற்று பணம் சம்பாதித்தனர். ஒருகட்டத்தில் பணத்தைப் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது.

மூவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் 


நடந்தது. இறுதியில் அது கொலையில் முடிந்தது. சடலத்தை அடர்ந்த காட்டில் வீசிவிட்டு இருவரும் தப்பினர். இந்த உண்மையை அறிந்த பிரத்யும்ன நொந்து போனான். தாயை அவமானகரமான நிலையில் பார்த்தது அவனது இதயத்தை உடைத்தது.


ஆனால், தாயின் மரணத்துக்குக் காரணமானவர்கள் கைதானது அவனுக்கு ஒரு திருப்தியை அளித்தது. இந்த வழக்கு ஒடிசா காவல்துறைக்கு ஒரு சவாலாக இருந்தது. ஆனால் ஒரு இளைஞனின் அசாத்திய முயற்சியும், நண்பனின் உதவியும் நீதியை நிலைநாட்ட உதவின.

இது போன்ற சம்பவங்கள் சமூகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன, 


மேலும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரும் விவாதத்தை தூண்டியுள்ளன. இந்த உண்மைக் கதை, நீதிக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்காத ஒரு மகனின் வீரத்தை எடுத்துக்காட்டுகிறது.


Summary in English : In 2016 Odisha, 35-year-old Sumitra Parik went missing and her body was found months later. Her 12-year-old son Pratyumna, aided by friend Ram Tej Sahu, discovered a pornographic video featuring her and coworker Suryakant Biswal. They anonymously tipped police with video stills, leading to arrests. Investigation revealed Sumitra's affair, involvement in adult films for money, and murder over profit dispute by Suryakant and manager Jagannath Patnaik.

 

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.