ஆபரணத் தங்கத்தின் விலை சமீப நாட்களாக தாறுமாறாக அதிகரித்த நிலையில், இன்று எந்தவொரு மாற்றம் ஏற்படாமல் நேற்றைய விலைக்கே விற்கப்பட்டு வருகின்றது. ஆபணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து சில தினங்களாக அதிகரித்துவரும் நிலையில், இன்று சவரனுக்கு எந்தவொரு மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்கப்படுகின்றது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ. 12,040 ஆகவும், சவரன், ரூ.96,320 ஆகவும் இருந்து வந்தது. இன்றும் கிராமுக்கு 12,040 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 96 ஆயிரத்து 320 ஆகவும் விற்கப்படுவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் தங்கத்தின் விலை, அடுத்து வரும் நாட்களில் குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது. ஆனால் வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.198.00 ஆகவும், கிலோவிற்கு ரூ.1,98,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது. இலங்கையிலும் ஆபரணத்தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,66,640, அதுவே கிராமிற்கு ரூ.45,830க்கு விற்கப்படுகின்றது. மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 3,36,160க்கும் ஒரு கிராமிற்கு ரூ. 42,020க்கு விற்கப்படுகின்றது. இலங்கையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு 575.36 LKR என்றும் ஒரு அவுன்ஸ 17,895.72 LKR என்று விற்பனை ஆகின்றது.
