அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவிப்பு அதிதீவிர வானிலை காரணமாக நிலம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, மிகச் சிறிய அளவிலான மேலதிக மழை வீழ்ச்சியும் கூட பாரிய சேதங்களை ஏற்படுத்தக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. எனவே, மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
