அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை- வெளியான அறிவிப்பு

 


முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களுக்கு ரமழான் கால விசேட விடுமுறை...!! 2026 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாக இருக்கும் முஸ்லிம்களின் புனித ரமழான் கால விசேட விடுமுறை பற்றிய சுற்றறிக்கையை பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தற்போது வெளியிட்டுள்ளது. அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை : 03/2026


EST-6/03/LEA/3125 பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுதந்திர சதுக்கம் கொழும்பு 07. 2026.01.07 அமைச்சுக்களின் செயலாளர்கள் மாகாண பிரதம செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்டச் சபைகளின் தலைவர்கள் 2026 றமழான் (ராமசான்) காலத்தில் விசேட விடுமுறை இம்முறை றமழான் (ராமசான்) மாதம் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகி 2026 ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி முடிவடைய உள்ளதால் இக் காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு தொழுகையிலும் மதவழிபாடுகளிலும் கலந்து கொள்ளக் கூடிய ஒழுங்குகளைச் செய்யுமாறு நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். 02. நிகழும். தொழுகைகளும் மதவழிபாடுகளும் நாளாந்தம் பின்வரும் நேர அட்டவணைப்படி * மு.ப. 03.30 முதல் மு.ப. 06.00 வரை * .บ. 03.15 एक्र पी.ए. 04.15 ม.ม. 06.00 क्र .. 07.00 * பி.ப. 07.30 முதல் பி.ப. 10.30 வரை 03. இக்காலத்தின் போது அவ் உத்தயோகத்தர்கள் சமய வழிபாடுகளில் கலந்து கொள்ளக்கூடியதாக வேலை நேரங்களை ஒழுங்கு செய்து கொடுத்தல் வேண்டும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டும் விசேட லீவு அங்கீகரிக்கப்படலாம். 04. மேலும் றமழான் (ராமசான்) பெருநாளில் இறுதித் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னதாக அரச சேவை கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் ஆகியவற்றில் கடமையாற்றும் தகைமையுடைய முஸ்லிம் உத்தயோகத்தர்களுக்கு விழா முற்பணம் வழங்கத் தயவு கூர்ந்து நடவடிக்கை எடுக்கவும்.


ஒப்பம்./ எஸ். ஆலோகபண்டார செயலாளர் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தொலைபேசி இலக்கம் : 011-2699399 தொலைநகல் இலக்கம் : 011-2692158


மின்னஞ்சல் முகவரி : ade-vi@pubad.gov.lk

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post