அஸ்வெசும 1ம் கட்ட பயனாளருக்கும்-மறுக்கப்பட்டவர்களுக்கும்-கொடுப்பனவு நிறுத்த பட்டவர்களுக்கும் சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

 

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அஸ்வெசும முதலாம் கட்ட கொடுப்பனவை பெறும் அல்லது கொடுப்பனவு நிறுத்தப்பட்டவர்களுக்கும் அதே போல் 1ம் கட்டம் வழங்கப்படாமல் மனக்குறை விண்ணப்பம் செய்தவர்களுக்கும் நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அனைவரையும் மீண்டும் மீளாய்வு செய்து தகுதியானவர்களை தெரிவு செய்யப்போவதாக நலன்புரி சபைகள் அறிவித்துள்ளது. தகுதி இல்லாத நிறைய பயனாளர்கள் கொடுப்பனவை பெறுவதாகவும்-நிறைய முறைப்பாடு கிடைக்க பெற்றிருப்பதாகவும் அதை நிவர்த்தி செய்ய இந்த மீளாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. மேலும் உங்கள் கிராமத்தில் உள்ள அஸ்வெசும உத்தியோகத்தர் மிக துல்லியமாக மீளாய்வு செய்வார் என குறிப்பிடப்படுகிறது. தவறான தகவல்களை வழங்குபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நலன்புரிகள் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சரியான தகவல்களை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.